search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ் பேக்"

    • சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது
    • கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை குறைக்கிறது.

    நமது சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் காட்டுவதற்கு நாம் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகளும் நமது சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    சருமத்தை அழகாக பராமரிக்க, இன்று ரோஜா பூவால் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரப் பற்றி பார்க்கவிருக்கிறோம், இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நல்ல பளபளப்பைக் கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

    ரோஜா பூ - 1 கப்(உலர்ந்தது )

    பொடித்த சர்க்கரை- 1 டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்

    தண்ணீர் - 1 டீஸ்பூன்

    முதலில் உலர்ந்த ரோஜா இதழ்களை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ரோஜா, பொடித்த சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து பின் முகத்தில் 10 நிமிடம் விடவும்.

    10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். உங்கள் முகம் அழகிய பூ போல மலந்திருப்பதை பார்க்க முடியும்.

    ரோஸ் வாட்டர் அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். இது நமது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தையும் குறைக்கிறது. தினமும் இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்திற்குப் புதிய பொலிவைத் தரும்.

    • ஆரஞ்சுதோலில் சருமத்தை பாதுகாக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளது.
    • இன்று ஆரஞ்சுதோலை சருமத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    ஆரஞ்சு பழத்தோலை கழுவி சுத்தமாக காய வைத்து, அதனை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.இதனை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.இதனை பயன்படுத்தி பல முறைகளில் முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்.

    ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேன் ,1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை இளஞ்சூடான நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர ,பொலிவான முக அழகு கிடைக்கும்.

    ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 1 மே.கரண்டி , தயிர் 2 மே.கரண்டி இரண்டையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் அப்படியே இருந்து விட்டு , முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி , அழகான தெளிவான முக அழகு கிடைக்கும்.

    ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி, பால் 1 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திற்கு அழகான நிறம் கிடைப்பதோடு சருமத்தில் உள்ள மருக்கள்,கரும்புள்ளிகள், நீங்கி விடும்.

    2 மே.கரண்டி பாலில் 5 பாதாம் பருப்புகளை சேர்த்து அரைத்து அதனுடன் 1 மே.கரண்டி அளவு ஆரஞ்சு பழத்தோல் பவுடரையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 -20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். சருமத்துக்கு ஆரோக்கியம் கொடுப்பதோடு , இது முகத்தை பளிச்சிட வைக்கும்.

    • முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.
    • சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளிச்சாறு முக அழகிற்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது. தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.மேலும் முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.இதனால் முக அழகு தெளிவடைகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது.

    முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளியை பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியிலுள்ள விட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும்.

    தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

    தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். பருக்களால் ஏற்படும் தோல் சிவந்து போவதையும் இது குறைக்கிறது.

    கிளிசரின் உடன் தக்காளி சாற்றை கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

    அதிக நேரம் வெயிலில் சுற்றி முகம் கருமையடைந்து இருப்பின், தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுகளால் முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கருமை விரைவில் அகன்றுவிடும்.

    முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகம் பொலிவுடன் காணப்படும்.

    முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய்பசை அகன்றுவிடும்.

    தினமும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை (Face pack) வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் அழகு ஜொலிக்கும்.

    • கரித்தூள் பேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன.
    • கரித்தூளை முகத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

    சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளைச் சரி செய்ய இதை பயன்படுத்தலாம். முகப்பரு பிரச்சனை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது. கரித்தூளை முகத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    கரித்தூள்- 1 டீஸ்பூன்

    புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1

    ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டீஸ்பூன்

    அத்தியாவசிய எண்ணெய் - 1 சொட்டு

    ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும். இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும்.

    முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களது முகத்தில் க்ளேன்சரை போட்டு நன்றாக மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும். க்ளேன்சர் இல்லை என்றால், பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

    மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை (1 டீஸ்பூன்) சேர்த்துக் கொள்ள வேண்டும். தேன் அல்லது முல்தானி மட்டியை (1 டீஸ்பூன்)இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

    இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.

    மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும்.

    இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இதனால் முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைக்கும்.

    • ஆப்பிளில் உள்ள நீர்ச்சத்து சருமத்தின் வறட்சியைத் தடுத்து, ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள உதவும்.
    • ஆப்பிளில் உள்ள சாலிசிலிக் அமிலம் பிம்பிளைக் குறைக்க உதவியாக இருக்கும்.

    ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு மிகவும் நல்லது. இது கொலாஜன் உற்பத்திக்கு உதவி, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவும். ஆப்பிளில் உள்ள காப்பர், சருமத்தைத் தாக்கும் தீங்கு விளைவிக்கும் புறஊதாக் கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பு அளிக்கும். மேலும் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் ஏ, சருமத்தை புற்றுநோய் செல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும்.

    சருமத்திற்கு நல்ல பாதுகாப்பை வழங்கி, சரும செல்களின் ஆரோக்கியத்தையும், சருமத்தின் மென்மைத்தன்மையையும் அதிகரிக்க ஆப்பிளை எப்படி பயன்படுத்துவது என்று காண்போம்.

    ஆப்பிளில் உள்ள வைட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும் மற்றும் சருமத்தை பொலிவாகவும் வைத்துக் கொள்ளும். மேலும் இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுத்தத்தைக் குறைத்து, சோர்வை நீங்கி, புத்துயிர் அளிக்கவும் செய்யும். உங்கள் முகத்தின் பொலிவை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், இந்த மாஸ்க்கைப் போடுங்கள்.

    * ஆப்பிள் - 1

    * தண்ணீர் - 1 கப்

    முதலில் ஆப்பிளின் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின் அதை மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி முதல் முறை செய்யும் போதே, முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

    ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இயற்கையாகவே சருமத்திற்கு பிரகாசத்தை வழங்க உதவும். இதில் உள்ள டானிக் அமிலம், மென்மையான சருமத்தைப் பெற உதவும். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

    1 ஆப்பிள் தோல்

    1 டீஸ்பூன் தேன்

    ஆப்பிளின் தோலை நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். அதில் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்ததும், முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

    • கரும்புள்ளிகள், முகப்பரு, கருவளையம் போன்ற சருமப் பிரச்சினைகளை தீர்க்கும்.
    • பீட்ரூட்டில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன.

    சருமப் பொலிவையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும் பொருட்களில் ஒன்று பீட்ரூட். இதில் இருக்கும் சத்துக்கள் சருமத்தை சிறப்பாக பராமரிக்க உதவுகின்றன. கரும்புள்ளிகள், முகப்பரு, கருவளையம் போன்ற சருமப் பிரச்சினைகளை பீட்ரூட்டைக் கொண்டு எளிதில் குணப்படுத்த முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே...

    இரண்டு பங்கு பீட்ரூட் சாறுடன், ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சினைகள் நீங்கும். இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சம்பழச்சாறு கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு தினமும் செய்து வந்தால், முகம் பளபளப்பாக இருக்கும்.

    ஒரு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன், சிறிது சர்க்கரை கலந்து முகத்தில் பூசி மென்மையாக ஸ்கிரப் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக நீங்கும்.

    பீட்ரூட் சாறுடன் தேன் மற்றும் பால் கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால் சரும வறட்சி குறையும்.

    இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு, பீட்ரூட் சாறை உதட்டில் தடவி வந்தால், கருமை மறைந்து விரைவில் உதடு சிவப்பாகும்.

    கடலை மாவு, பீட்ரூட் சாறு, தயிர் இவை மூன்றும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு ரோஜா இதழ் சேர்த்து அரைத்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள கருமை நீங்கும். சருமம் மென்மையாகும்.

    முல்தானி மெட்டி பொடியுடன், சிறிதளவு பீட்ரூட் சாறு மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றித் தடவினால் கருவளையம் மறையும்.

    பீட்ரூட், கேரட், ஆப்பிள் மூன்றையும் சேர்த்து அரைத்து சிறிது கடலை மாவு கலந்து முகத்தில் பேஸ்பேக் போடவும். இவ்வாறு இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை செய்து வந்தால் கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.

    பீட்ரூட் சாறுடன் அரிசி மாவு 2 டீஸ்பூன், தேன் 1 டீஸ்பூன் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இவ்வாறு செய்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் நீங்கும்.

    பீட்ரூட் துருவலுடன், வாழைப்பழம் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் பூசினால் சரும வறட்சி நீங்கி பொலிவாகும். அரைத்த பீட்ரூட் விழுதுடன், ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி ஸ்கிரப் செய்து வந்தால் சருமத்தில் உண்டான கருமை நீங்கும்.

    • செம்பருத்தி நம் சருமத்தை பாதுகாப்பதற்கு அதிகமாக உதவுகிறது.
    • கால நிலைக்கு ஏற்றவாறும் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

    தற்போது கோடை காலம் வந்து விட்டதால் மக்கள் பலரும் சந்திக்கும் ஒரே பிரச்சினை சரும பிரச்சனை தான். அதில் கோடைகாலம் மட்டுமல்லாமல் குளிர்காலம் போன்ற கால நிலைக்கு ஏற்றவாறும் சருமம் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

    எந்த செயற்கை இரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையிலேயே நம்முடைய சருமத்தை நம்மால் பாதுகாக்க முடியும். அதற்கு நமக்கு பெரிதும் பயன்படுவது செம்பருத்தி பூ.

    கிராமப்புறம் மற்றும் பல இடங்களிலும் மிக எளிதாக கிடைக்கக்கூடிய இந்த சம்பவத்திற்கு பிறகு ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. அதிலும் இந்த செம்பருத்தி நம் சருமத்தை பாதுகாப்பதற்கு அதிகமாக உதவுகிறது. இந்தப் பூவை வைத்து நம் சருமத்தை எப்படிப் பாதுகாக்கலாம் என்று பார்க்கலாம்.

    செம்பருத்தி பூவை நன்றாக வெயிலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் மற்றும் கற்றாலையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

    செம்பருத்தி பொடி செய்ய இயலாதவர்கள், அந்தப் பூவை முதல் நாள் இரவே நன்றாக தண்ணீரில் ஊற வைத்து பின்பு காலையில் பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

    இந்தக் கலவையை முகத்தில் தடவுவதற்கு முன்பு நாம் முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் வரை நீராவியில் காட்ட வேண்டும். இதன் மூலம் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் வெளியேறும்.

    அதன் பிறகு முகத்தை நன்றாக துடைத்து விட்டு கலந்து வைத்துள்ள பேஸ்டை தடவ வேண்டும். கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் வரை இதை வைத்திருக்க வேண்டும்.

    பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு ஒரு நாள் வரை நம் முகத்தில் எந்த சோப்பும் பயன்படுத்த கூடாது. அப்பொழுதுதான் கூடுதல் பலன் அளிக்கும்.

    இதை நாம் வாரத்திற்கு ஒருநாள் செய்து வந்தால் நம் முகம் தங்கம்போல மினு மினுக்கும். மேலும் முகத்தில் ஏற்படும் தேமல் படை போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.

    • சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு.
    • கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது.

    ஸ்ட்ராபெர்ரி அனைத்துவிதமான சருமங்களுக்கும் அளவிட முடியாத நன்மைகளை தருகிறது. சருமத்துளைகளில் அடங்கியிருக்கும் அழுக்குகளை வெளியேற்றவும், முகத்தை சுத்தப்படுத்தவும் சிறப்பாக செயல்படுகிறது.

    இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும். அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.

    சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.

    ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் சாலிசிலிக் அமிலமானது முகப்பருக்களை நீக்க உதவுகிறது. இறந்த செல்கள் முகத்தில் தேங்கியிருக்கும் போது முகத்தின் பளபளப்பு குறைகிறது. இந்த இறந்த செல்களை நீக்க உதவுகிறது.

    கொலாஜன் உற்பத்தி குறைவால் சருமத்தில் சுருக்கங்களும் இளவயதில் முதுமை தோற்றமும் உண்டாகிறது. இந்த கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் ஸ்ட்ராபெர்ரி பயன்படுகிறது. அழகான நிறத்தை கொண்டிருக்கும் ஸ்ட்ராபெர்ரி வைட்டமின் சி சத்து நிறைந்தது. இவற்றில் இருக்கும் ஒமேகா 3 கூடுதலாக சருமத்தின் நிறத்தை மேம்படுத்தி முகத்தை பொலிவாக வைக்க உதவுகிறது.

    ஸ்ட்ராபெர்ரி, தயிர், தேன் மூன்றையும் சமஅளவில் எடுத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவவும், இவை முகப்பருவை குறைப்பதோடு முகத்தையும் பொலிவாக்க உதவும். வாரம் ஒருமுறை இந்த பேக் போடுவதன் மூலம் முகப்பருக்களை விரைவாக குறைக்க முடியும்.

    ஸ்ட்ராபெர்ரி மசித்தது 2 டீஸ்பூன், கற்றாழை ஜெல் 1 டீஸ்பூன், பாலேடு 1 டீஸ்பூன் எடுத்து மூன்றையும் நன்றாக கலந்து குழைத்து முகம் மற்றும் கழுத்துபகுதியில் தடவுங்கள். பிறகு இலேசாக மசாஜ் செய்து விடவும். 20 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒருமுறை இதை செய்யலாம். கற்றாழை ஜெல் முகத்தில் இருக்கும் வறட்சியை தடுத்து எண்ணெய் பசை இல்லாமல் சருமத்தை பொலிவாக வைக்க உதவுகிறது. கற்றாழை பயன்படுத்துவதால் அவை சருமத்துளைகளை அடைக்காமல் முகத்தை சுத்தம் செய்து வெளியேறும். சருமத்தில் கரும்புள்ளிகள். பருக்களால் வடு போன்றவற்றையும் மறைய செய்யக்கூடியது. இதனோடு ஸ்ட்ராபெர்ரி கலந்து சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

    ஸ்ட்ராபெர்ரியை மசித்து எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை காத்திருந்து வெதுவெதுப்பான நீரை கொண்டு கழுவினால் எண்ணெய் பசை கட்டுக்குள் வரும்.இது அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு சருமத்தையும் சுத்தம் செய்து இயற்கை ப்ளீச் போல் சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

    • சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது.
    • தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தவறான உணவு பழக்கம்,அதிக காற்று மாசு, இரவு நேரத்தில் தாமதமாக உறங்குதல், அதிக கெமிக்கல் கொண்ட கிரீம்களை பயன்படுத்துதல் இப்படிபட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் முகத்தின் ஆரோக்கியம் கெட்டு பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கரு வளையங்கள், தழும்புகள் ஆகியவை உண்டாகுகின்றன. இது போன்ற பாதிப்புகள் அனைத்தையும் எளிதில் குணமாக்க ஆயுர்வேத மருத்துவ குணம்கொண்ட தேன் உதவுகிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது. இதில் உள்ள என்சைம்கள், தாவரங்களின் மூலப்பொருட்கள் மற்றும் இதிலுள்ள நல்ல பாக்டீரியா ஆகியவை ஒன்று சேர்ந்து உங்களுக்கு சிறந்த முக அழகை தரும். தூய்மையான, பதப்படுத்தப்படாத தேன் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளை நீக்கி பளபளப்பான சரும அழகை உண்டாக்கும். மேலும் இதன் இயற்கை தன்மை தோல் நோய்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுத்து உங்களை எப்போதும் இளமையாக வைக்கும்.

    தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே மங்கலான உங்கள் முக அழகு பொலிவாக மாறிவிடும். சிறிது எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து முகத்தில் தடவி வருவதால் கரும்புள்ளிகளை எளிதில் விரட்டலாம். அத்துடன் உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டும், முகத்தை மென்மையாக்கும், முகத்தின் நிறத்தை பளபளப்பாக்கும், என்றென்றும் இளமையான தோற்றத்தை தரும். தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க உதவும் என அழகியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அதிகமான பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பருக்கள் உருவாகி மறைந்து விடாமல், அந்த இடத்தில் பெரிய தழும்புகளையும் உருவாக்கி விடுகிறது. பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் மிக சுலபமாக நீக்க சிறிது நெய்யுடன் தேன் கலந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள புண்கள், வீக்கம், வடுக்கள் போன்றவை எளிதில் குணமாகும்.

    கடைகளில் விற்கும் பதப்படுத்தட்ட தேனை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. காரணம், கடைகளில் விற்கப்படும் தேனை முழுவதுமாக சூடு படுத்துகின்றனர். எனவே அதில் உள்ள இயற்கை பாக்டீரியா, என்சைம்கள் குறைந்து விடுகிறது. எனவே சரும பாதுகாப்பிற்கு சுத்தமான, பதப்படுத்தபடாத தேனை பயன்படுத்த வேண்டும்.

    • இந்த ஃபேஸ் பேக்கை தொடர்ந்து போட்டு வரும் போது சருமத்தின் நிறம் மாறுவதை காணலாம்.
    • இன்று பால் பவுடரை எந்த முறையில் சருமத்திற்கு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

    பால் பவுடருடன் சிறிது எலுமிச்சை அல்லது ஆரஞ்சு சாறு சேர்த்து பல்வேறு விதமான பேஷியலை முயற்சி செய்யுங்கள். அது வளமான பொலிவை நமது முகத்திற்கு கொடுக்கும். பாலை விடவும் இது சிறந்தது. ஏனெனில் பாலை விட பால் பவுடரில் சில ஊட்டச்சத்துக்களின் காம்பவுண்ட்டுகள் சேர்க்கப்பட்டிருக்கும். அது சருமத்தை மென்மைப்படுத்த உதவும்.

    எண்ணெய் பசையான சருமம் உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மிகவும் ஏற்ற முறை இதுதான். சருமத்தில் உள்ள எண்ணெய் பசை அதனால் உருவாகும் பருக்கள் ஆகியவற்றைக் குறைத்து சருமத்தின் நிறத்தைக் கூட்டும்.

    ஒரு ஸ்பூன் பால் பவுடருடன் ஃபிரஷ்ஷாக எடுத்த எலுமிச்சை சாறினை இரண்டு ஸ்பூன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அந்த கலவையை முகத்தை நன்கு கழுவி விட்டு முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் இடைவெளி இல்லாமல் நன்கு அப்ளை செய்து உலர விடுங்கள். நன்கு உலர்ந்தபின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இந்த முறையைப் பயன்படுத்திப் பாருங்கள். சிறந்த ரிசல்ட்டை பெற்றிருப்பதை உணர்வீர்கள்.

    ஒரு டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன் சில துளிகள் குங்குமப்பூவைச் சேர்த்து அதனுடன் பேஸ்ட் செய்வதற்கான சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பேஸ்ட்டாக்கிக் கொள்ள வேண்டும். அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்து அதை அப்படியே அரை மணி நேரம் உலர விடுங்கள். அதன் பின்னர் குளிர்ந்த நீரால் நன்கு கழுவி விடுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பால்பவுடர் - 1 ஸ்பூன்

    அரிசி மாவு - 1 ஸ்பூன்

    எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 1

    அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பின்னர் இந்த பேக்கை உங்களுடைய முகம் கழுத்து எல்லா இடங்களிலும் நன்றாக அப்ளை செய்து 20 நிமிடங்கள் அப்படியே விட்ட பின்னர் முகத்தை தண்ணீரில் லேசாக தேய்த்து கழுவுக் கொள்ளவும். நீங்களே எதிர்பாராத வகையில் முகம் பொழிவு பெற்றிருக்கும். வாரத்தில் மூன்று நாட்கள் அதாவது ஒரு நாள் விட்டு, ஒரு நாள், இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வரும் போது உங்களுடைய சருமத்தின் நிறம் கூடிக்கொண்டே இருக்கும்.

    • பருக்கள் வருவது தடுக்கப்படும்.
    • பருக்கள் வருவது தடுக்கப்படும்.

    வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயல்படும். தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம் மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும்.

    இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.

    வெந்தயத்தை நீரில் ஊற வைத்து பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இருமுறை செய்து வரலாம். வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்தபின் இந்த பேஸ் பேக் போட்டு கொண்டால் சருமம் கருமை அடைவதை தடுக்கலாம்.

    வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும். ஆனால் வெந்தயம் குளிர்ச்சிமிக்கது என்பதால், சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் இதனை வாரம் 2 முறை போடுவது நல்லது.

    வெந்தயத்தை பொடி செய்து அதனை தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். பருக்கள் வருவது தடுக்கப்படும்.

    வெயிலில் சருமத்தின் நிறம் கருமை நிறத்தில் மாற்றமடைந்திருந்தால், அதனை வெந்தயத்தைக் கொண்டு எளிதில் நீக்கலாம். அதற்கு 1/2 கப் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அந்நீரை குளிர வைத்து பின் அதனைக் கொண்டு தினமும் இரவில் படுக்கும் முன் முகம் கை, கால்களில் தடவி, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.

    • முதுமையைத் தடுப்பதற்கு வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம்.
    • வாழைப்பழத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    வயதாக ஆரம்பித்தவுடன், முகத்தில் முதுமையின் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும், அதாவது சுருக்கங்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் தோல் பராமரிப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், முதுமையின் அறிகுறிகளைத் தடுக்க, இன்று உங்களுக்காக சில வீட்டு வைத்தியங்கள் குறித்த தகவல்களை அளிக்கிறோம்.

    உங்கள் சருமப் பராமரிப்பில் இதை நீங்கள் பின்பற்றினால், அது உங்களை நீண்ட காலத்திற்கு அழகாகவும் இளமையாகவும் இருக்கலாம். இந்த உதவிக்குறிப்புகள் உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றன. இது உங்கள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கிறது மற்றும் சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

    இதற்கு வாழைப்பழத்தை ஒரு பாத்திரத்தில் தோலுரித்து நன்றாக மசிக்கவும். பின்னர் இந்த வாழைப்பழ பேஸ்ட்டை சீராக முகத்தில் தடவவும். அதன் பிறகு, சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே இருக்க விட்டு உலர்த்த பிறகு சுத்தமான நீரினால் கழுவவும். இந்த வாழைப்பழ மாஸ்கை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தினாலே, நீங்கள் நல்ல பலனைக் காணத் தொடங்குவீர்கள். வாழைப்பழத்தில் நல்ல அளவு வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி நிறைந்துள்ளதால், முகச் சுருக்கங்கள் மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

    வாழைப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் சருமம் இளமையாகத் தோற்றமளிக்கும். முதுமையைத் தடுப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்காக வாழைப்பழத்தை பல வழிகளில் பயன்படுத்தலாம். வாழைப்பழத்தையும் வெண்ணெய்ப்பழத்தையும் ஒன்றாகப் பிசைந்து முகத்திலும் கழுத்திலும் மாஸ்க் போடவும். சுமார் 25 நிமிடங்கள் வரை காத்திருந்து, பிறகு கழுவவும்.

    வாழைப்பழத்தில் பன்னீர் சில துளிகள் விட்டுப் பிசைந்து அதனை ஃபேஸ் மாஸ்க்காகப் போட்டு அரைமணி நேரம் அல்லது ஒரு மணிநேரம் விட்டு பிறகு கழுவலாம்.

    வாழைப்பழத்தைக் குழைத்து, ஃபேஸ் மாஸ்க்காகப் போடவும். 20-25 நிமிடங்கள் கழித்து கழுவவும். சருமம் வறண்டு போயிருந்தால், இதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக்கொள்ளலாம். இன்னும் முகப் பொலிவு பெற, ஒரு டீஸ்பூன் வைட்டமின் E (வைட்டமின் E காப்சூலை உடைத்து அப்படியே அதிலுள்ளவற்றை ஊற்றிக் கலக்கினால் போதும்) மற்றும் ஒரு டேபிள்ஸ்பூன் தயிரையும் சேர்த்துக்கொள்ளலாம். இதில் பொட்டாசியமும் நீரும் நிறைந்திருப்பதால், சருமத்தில் நீர்ச்சத்தைத் தக்கவைத்து சருமத்தை மென்மையாகவும் பொலிவாகவும் வைத்துக்கொள்ள வாழைப்பழம் உதவுகிறது.

    உங்கள் முகத்திலோ முகப்பரு உள்ள பகுதிகளிலோ வாழைப்பழத் தோலின் உட்பகுதியை வைத்துத் தேய்த்தால் போதும். அழற்சியைக் குறைக்கிறது. பிசைந்த வாழைப்பழத்துடன் மஞ்சள் பொடி, தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்தும் ஃபேஸ் மாஸ்க் போடலாம். அது முகப்பருக்களை ஒழிப்பது மட்டுமின்றி, சருமத்திற்கும் இயற்கையான பளபளப்பையும் பொலிவையும் கொடுக்கும்.

    கரும்புள்ளிகளின்மீது வாழைப்பழத் தோலைத் தேய்த்தால் அல்லது பிசைந்த வாழைப்பழத்தையே தேய்த்தால் வயதாவதால் தோன்றும் புள்ளிகளும், கரும்புள்ளிகளும், முகப்பரு வடுக்களும் குறைகின்றன. விரைவில் பலன் பெற, இதை குறைந்தது வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.

    ×